சென்னை | காசிமேடு | 26.12.2025
21-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை காசிமேடு கடற்கரையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.) சார்பில், உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சி, வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் திரு. ஆர்.எஸ். ராஜேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில், 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், அ.தி.மு.க.வை சேர்ந்த அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு, சுனாமி பேரழிவில் உயிர்நீத்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
இந்த நினைவு தின நிகழ்வு, இயற்கை பேரழிவுகளின் தாக்கத்தை நினைவூட்டுவதோடு, உயிரிழந்தவர்களின் நினைவுகளை போற்றும் வகையில் அமைந்தது.
எம். யாசர் அலி
சென்னை செய்தியாளர் | தமிழ்நாடு டுடே
ஒளிப்பதிவாளர் : ராஜேஷ்