Sat. Jan 10th, 2026

கள்ளக்குறிச்சி | திருக்கோவிலூர் | 25.12.2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரம், தெற்கு தெருவில் உள்ள ஸ்ரீ வாசவி மகாலில், வாசவி சங்கத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மாலை நேரத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில், வாசவி கிளப் இன்டர்நேஷனல் V503A மாவட்ட ஆளுநர் திரு. சமுத்திர ராஜ்குமார் அவர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீ வாசவி சங்கம் மற்றும் வனிதா வாசவி சங்கம் ஆகியவற்றின் புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய நிர்வாகிகள்:

ஸ்ரீ வாசவி சங்கம், தலைவர் : திரு. மோகன்,செயலாளர் : திரு. ஜெய்சங்கர், பொருளாளர் : திரு. அஜித் குமார்,

வனிதா வாசவி சங்கம், தலைவர் : திருமதி லதா,செயலாளர் : திருமதி அமுதா,பொருளாளர் : திருமதி குமாரி.

இந்த நிகழ்ச்சியில்,
திருக்கோவிலூர் ஆரிய வைத்திய சமுக தலைவர் திரு. வாசுதேவன்,உப தலைவர் திரு. கோல்டு ரவி,
மேலும் வாசவி கிளப்பின் முக்கிய பொறுப்பாளர்களான சதீஷ்குமார், ராஜா சுப்பிரமணியம், லக்ஷ்மி ஆனந்தன், கணேஷ் கீதாசங்கர், பவித்ரா, கவிதா, புஷ்பா உள்ளிட்டோர் மற்றும் வாசவி சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

சேவை நடவடிக்கைகள்:

பதவியேற்பு விழாவையொட்டி,கால்நடைகளுக்கு தீவனம் வழங்கப்பட்டது,ஏழை மக்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன,மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் விதை பந்துகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன,
வயதான பெரியோர்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டன.
இந்த விழா, சமூக சேவை மற்றும் மனிதநேய பணிகளை வலியுறுத்தும் வகையில் அமைந்தது.

நிகழ்ச்சியின் நிறைவாக, சங்க செயலாளர் திரு. ஜெய்சங்கர் அவர்கள் நன்றி உரை ஆற்றி விழாவை நிறைவு செய்தார்.

வி. ஜெய்சங்கர்
மக்கள் தொடர்பு அதிகாரி
தமிழ்நாடு டுடே,
கள்ளக்குறிச்சி மாவட்டம்

By TN NEWS