Sat. Jan 10th, 2026

திருநெல்வேலி | டிசம்பர் 26

திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமை கோரப்படாமல் தாலுகா காவல் நிலையம் மற்றும் முன்னீர்பள்ளம் காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 151 வாகனங்கள், வரும் 29.12.2025 அன்று முன்னீர்பள்ளம் காவல் நிலைய வளாகத்தில் வைத்து பொது ஏலமாக விற்கப்பட உள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.

அதேபோல், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் உரிமை கோரப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 157 வாகனங்கள், 30.12.2025 அன்று அம்பாசமுத்திரம் காவல் நிலைய வளாகத்தில் வைத்து பொது ஏலத்திற்கு விடப்படுகின்றன.

ஏலம் தொடர்பான முக்கிய தகவல்கள்:

ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர்,
28.12.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை,திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில்
ரூ.5,000/- முன்பணம் (Deposit) செலுத்தி,தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பெயர் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும்.ஏலம் எடுத்தவுடன்,முழுத் தொகையும்
அதற்குரிய சரக்கு மற்றும் சேவை வரி (GST – 18%)
ஆகியவற்றை அன்றே ரொக்கமாக அரசுக்கு செலுத்தி,
வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் துறையை தொடர்பு கொள்ளலாம்.

ஜே. அமல்ராஜ்
மாவட்ட தலைமை செய்தியாளர், தென்காசி

By TN NEWS