Sat. Jan 10th, 2026


திருவனந்தபுரம்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு முதல் முறையாக பாரதிய ஜனதா கட்சி (BJP) சார்பில் மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டு, கேரள அரசியலில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக திரு. வி.வி. ராஜேஷ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மொத்தம் உள்ள 100 மாநகராட்சி உறுப்பினர்களில் 51 உறுப்பினர்களின் ஆதரவுடன், பாரதிய ஜனதா கட்சி திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம், கேரள மாநிலத்தில் பாஜக கைப்பற்றும் முதல் மாநகராட்சி என்ற பெருமையை திருவனந்தபுரம் மாநகராட்சி பெற்றுள்ளது.

மேலும், துணை மேயராக திருமதி ஆஷா நாத் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 45 ஆண்டுகளாக திருவனந்தபுரம் மாநகராட்சியை கம்யூனிஸ்ட் கட்சி நிர்வகித்து வந்த நிலையில், தற்போது அந்த ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் மாநகராட்சியின் 47-வது மேயராக திரு. வி.வி. ராஜேஷ் அவர்கள் விரைவில் பதவி ஏற்க உள்ளார். இந்த வெற்றி, கேரளாவில் பாஜக வளர்ச்சிக்கு முக்கிய திருப்புமுனையாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

வி. மணிகண்டன் வேலாயுதன்
மாவட்ட செய்தியாளர்,
கன்னியாகுமரி மாவட்டம்

By TN NEWS