வேலூரில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஆதரவாக
ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
வேலூர் மாவட்டத்தில்,
வேலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிரே,
100 நாள் வேலைத் திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து,
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைவர்கள் பங்கேற்பு:
வேலூர் மாவட்ட திமுக கழக அவைத்தலைவர்
திரு. முகமது சகி (Ex-MP)
வேலூர் மாநகராட்சி மேயர்
திருமதி. சுஜாதா ஆனந்த்குமார்
மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு,
ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கடும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்தில், 100 நாள் வேலைத் திட்டம் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத் திட்டம் என்பதையும்,
அதை பாதிக்கும் எந்த முயற்சியையும் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பதையும் வலியுறுத்தினர்.
✍️ வேலூர் மாவட்ட செய்தியாளர்
T. தென்பாண்டியன்

