தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் (M.Sc., Ph.D.) அவர்கள் முன்னிலையில்
“என் வாக்குசாவடி – வெற்றி வாக்குசாவடி” செயல் திட்ட கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டம், தருமபுரி மேற்கு மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி (60) பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றியம்
வாக்குசாவடி எண்கள் : 287, 288 என்ற பகுதிகளில்
17.12.2025 (புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.
கூட்டத்திற்கு பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றிய கழக செயலாளர் முத்துக்குமார் அவர்கள் தலைமை தாங்கினார்.
நிகழ்வில் மனோகரன், ஜெயகுமார், அழகரசன், வடிவழகன், பெரியசாமி, தலித்குமார் (வி.சி.க), கலைமணி, சூரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், தகவல் தொழில்நுட்ப அணி
தொகுதி ஒருங்கிணைப்பாளர் K. கண்ணப்பன்,
ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சக்தி,
இளைஞரணி நிர்வாகிகள்,
BLA2, BDA, BLC ஆகிய பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்ற குறிக்கோளுடன்,
“என் வாக்குசாவடி – வெற்றி வாக்குசாவடி” திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவது, வீடுவீடாக சென்று கழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைப்பது,
அதிக வாக்குகள் பெற்று வெற்றி உறுதி செய்வது
என்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
மண்டல செய்தியாளர்:
D. ராஜீவ் காந்தி



