
அரிய மரபியல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அவசர உயிர்காக்கும் சிகிச்சை தேவை!
காஞ்சிபுரம் மாவட்டம் – அவசர மனிதாபிமான வேண்டுகோள்!
காஞ்சிபுரம் மாவட்டம், தாயார்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் – சசிகலா தம்பதியினரின் மகள் கௌஷிகா (வயது : 7) அரிய வகை மரபியல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்களின் பரிந்துரையின்படி, குழந்தைக்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிறப்பு மருந்து (Injection) தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
ஆரம்பத்தில் ஒரு முறை அந்த மருந்து அளிக்கப்பட்டபோது குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டாலும், அதிக செலவு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிகிச்சை வழங்கப்படாவிட்டால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். தற்போது குழந்தையின் தலை மற்றும் கண்களின் வளர்ச்சி அசாதாரணமாக மாறி, உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
🔹 தேவையான உதவி:
உயிர்காக்கும் மருந்து / ஊசி வாங்க நிதி உதவி
CSR / NGO மருத்துவ உதவி திட்டம் மூலம் சிகிச்சை ஏற்பாடு
அரசு மருத்துவமனை / சிறப்பு மருத்துவமனை வழியாக சிகிச்சை தொடர உதவி
🔹 மனிதாபிமான வேண்டுகோள்:
இக்குழந்தையின் உயிரை காக்க,
NGO அமைப்புகள்,
CSR நிறுவனங்கள்,
தன்னார்வ அமைப்புகள்,
மருத்துவ உதவி அறக்கட்டளைகள்:
முன்வந்து உதவ வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பணிவுடன் கேட்டுக்கொள்கிறார்கள்.
“சரியான நேரத்தில் சிகிச்சை கிடைத்தால் எங்கள் குழந்தை ஒரு நல்ல எதிர்காலத்தை அடைய முடியும்” என பெற்றோர் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.
📞 தொடர்புக்கு :
செல்வகுமார் (கௌஷிகாவின் தந்தை)
📱 95006 11060
🏠 முகவரி :
16A, 1வது தெரு,
எம்.ஜி.ஆர் நகர் (கிழக்கு),
தாயார்குளம்,
காஞ்சிபுரம் – 631501
பெ. லோகநாதன்
மாவட்ட செய்தியாளர், காஞ்சிபுரம்.
