குடியாத்தம், டிசம்பர் 12 —
ஷெப்ளின் சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தொழுநோய் மையம் – கரிகிரி மருத்துவமனை குடியாத்தம் கிளினிக், கிரீன்வே அறக்கட்டளை ஆகியவை இணைந்து, 2025 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ மற்றும் அதிகாரமளித்தல் முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமில்,
பொது மருத்துவ பரிசோதனை
தோல், எலும்பியல், கண், பல் பரிசோதனை
உடல் மற்றும் மனநல ஆலோசனைகள்
தேவையான மருத்துவ பரிசோதனைகள்
என பல்வேறு சுகாதார சேவைகள் வழங்கப்பட்டன.
மேலும், தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன்,
மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி வாய்ப்புகள்
வேலை வாய்ப்பு வழிகாட்டுதல்
போட்டித் தேர்வு பயிற்சி தகவல்கள்
விளையாட்டு துறையில் பங்கேற்கும் வழிகாட்டல்
போன்ற முக்கியமான அதிகாரமளித்தல் தகவல்களும் வழங்கப்பட்டன.
முக்கியமாக, பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை உறுப்புகள், முடநீக்க கருவிகள், சக்கர நாற்காலிகள் போன்ற உதவி உபகரணங்களை வழங்குவதற்கான பரிசோதனை மற்றும் அளவீடு மேற்கொள்ளப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள்:
இம்முகாமில் சிறப்பு விருந்தினர்களாக,
குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அமுலு விஜயன்
வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி
மாவட்ட தொழுநோய் அலுவலர் டாக்டர் ப்ரீத்தா
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. பாபு
குடியாத்தம் நகராட்சி தலைவர் செளந்தரராஜன்
முன்னாள் அரசு வழக்கறிஞர் கே. எம். பூபதி
ஆகியோர் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.
அவர்கள், பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள், சக்கர நாற்காலிகள் மற்றும் பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கினர்.
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்