



தர்மபுரி
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பையர்நத்தம் பகுதியில், “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” நிகழ்வு, பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பி. எஸ். சரவணன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்கவும், தமிழக துணை முதலமைச்சரும், கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படியும்,
வடக்கு மண்டல பொறுப்பாளரும், நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சருமான எ.வ. வேலு,
தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி,
தர்மபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் அவர்களின் தலைமையிலும் வழிகாட்டுதலிலும் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வு, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி, பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பையர்நத்தம் ஊராட்சி, வாக்குச்சாவடி எண் 233-ல் நடைபெற்றது.
“ஓரணியில் தமிழ்நாடு” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த பரப்புரை கூட்டத்தில், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் சார்பு அணி நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள், BLA-2, BLC, BDA நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மண்டல செய்தியாளர்
ராஜீவ் காந்தி
