பாராட்டு சான்றிதழ் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!
விழுப்புரம் மாவட்டம் – திருவெண்ணைநல்லூர்:
திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டி குடிசை கிராமத்தைச் சேர்ந்த 23 வயது மாற்றுத்திறனாளி பெண்ணின் வாழ்வை எளிதாக்கும் விதமாக, திருவெண்ணைநல்லூர் காவல் நிலையம் பெரும் நலத்திட்ட நடவடிக்கை மேற்கொண்டது.
அந்தப் பெண்ணுக்கு கழிப்பறை வசதி இல்லாததை அறிந்த திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அழகிரி, காவல் நிலைய காவலர்கள் சார்பில் புதிய கழிப்பறை கட்டி வழங்கி மனிதநேய பணியை ஆற்றினார். இந்த செயல் கிராம மக்கள் மற்றும் பெண்ணின் குடும்பத்தினரிடையே பெரும் பாராட்டை பெற்றது.
காவல் கண்காணிப்பாளர் பாராட்டு:
இந்த சமூகப் பணியை பாராட்டும் வகையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் P. சரவணன், IPS., ஆய்வாளர் அழகிரியை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
சமூக நலத்தை முன்னிறுத்திய காவல்துறையின் இந்த செயல், பொதுமக்களிடம் காவல்துறையின் நல்லெண்ணப் பணியை மீண்டும் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
வி. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே – மக்கள் தொடர்பு அதிகாரி