Tue. Dec 16th, 2025


வேலூர் மாவட்டம், குடியாத்தம் – டிசம்பர் 11:
பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டி, இந்திய குடியரசு கட்சி சார்பில் குடியாத்தத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு மண்டல செயலாளர் இரா.சி. தலித் குமார் தலைமையேற்றார். தொடக்கத்தில் மாவட்ட துணைத் தலைவர் மது வரவேற்புரை நிகழ்த்தினார்.

கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்

நிகழ்வில் முக்கியமான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்:

ஒன்றிய செயலாளர் ராஜ்குமார்

மாவட்ட இணைச் செயலாளர் சின்ன பிரகாஷ்

வேலூர் மாநகரத் தலைவர் சக்திவேல்

ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் குசேலன்

ராணிப்பேட்டை நகர தலைவர் இளங்கோவன்

மாவட்ட பொருளாளர் வெங்கடேசன்

மாவட்ட செயலாளர் பூமியா அசோக் குமார்

மாவட்ட மாணவரணி சரத்குமார்


மேலும், சிறப்பு அழைப்பாளர்களாக ராமஜெயம், மாநில துணைத் தலைவர் தன்ராஜ், கொள்கை பரப்புச் செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

பெரும் திரளாக மக்கள் பங்கேற்பு:

ஆண்கள், பெண்கள் என குடியாத்தம் மற்றும் சுற்றுப்பகுதி மக்களும் அதிக அளவில் பங்கேற்று பஞ்சமி நில மீட்பிற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

கோட்டாட்சியரிடம் மனு வழங்கினார்:

போராட்டம் முடிவில், கட்சி நிர்வாகிகள் சார்பில் கோட்டாட்சியர் சுபலட்சுமி அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS