Thu. Dec 18th, 2025



கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட விருத்தாசலம் சாலையில் செயல்பட்டு வரும் Indian Overseas Bank (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) கிளையில் கடந்த மூன்று நாட்களாக இணையதள சேவை மற்றும் கணினி செயல்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள்,
BSNL இணைய சேவை சரி செய்யப்பட்ட பிறகே வங்கி சேவைகள் முழுமையாக தொடங்கும் என தெரிவித்து வருவதால், கிராமப்புற மற்றும் நகரப்புற மக்களின் அன்றாட நிதி தேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால்,

சம்பள பணம் பெற முடியாமல் அரசு மற்றும் தனியார் பணியாளர்கள்

பென்ஷன் தொகை எடுக்க முடியாமல் மூத்த குடிமக்கள்

நகை அடகு, வட்டி செலுத்துதல், கணக்கு வரவு–செலவு போன்ற முக்கிய வங்கிச்சேவைகள் அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளன
என வாடிக்கையாளர்கள் மன வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

வங்கி பிராந்திய அதிகாரிகள் (Regional Officers) உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மூன்று நாட்களாக தொடரும் இந்த அவல நிலை எப்போது முடிவடையும்?
என்ற கேள்வியுடன், உளுந்தூர்பேட்டை மக்கள் வங்கி நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.


செய்தி:
V. ஜெய்சங்கர்
மக்கள் தொடர்பு அதிகாரி
தமிழ்நாடு டுடே
கள்ளக்குறிச்சி மாவட்டம்


By TN NEWS