வேலூர் மாவட்டம், குடியாத்தம் செருவங்கியில்
புரட்சியாளர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 69ஆவது நினைவஞ்சலி நிகழ்வு
டிசம்பர் 6 – குடியாத்தம், வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செருவங்கியில், இந்திய குடியரசு கட்சி சார்பில் நாட்டின் அரசியல், சமூக முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்த புரட்சியாளர் பாபாசாகிப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 69ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்டத் துணைத் தலைவர் மது தலைமையேற்று வழிநடத்தினார். மாவட்ட மாணவரணி செயலாளர் சரத்குமார் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியின் சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன் மற்றும் மாவட்ட அமைப்பு செயலாளர் சுரேஷ் குமார் ஒருங்கிணைத்தனர்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இந்திய குடியரசு கட்சி வேலூர் மண்டல செயலாளர் இராசி தலித் குமார் கலந்து கொண்டு, அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அம்பேத்கரின் சமூக சிந்தனைகள், சமத்துவக் கொள்கைகள் குறித்து உரையாற்றி இளைஞர்கள் சமூக மாற்றத்திற்கான முன்னோடிகளாக செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மேலும் மாவட்ட இணைச் செயலாளர் தாஸ், ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், ஜெய் நகரத் தலைவர் ராஜ்குமார், கார்த்திகேயன், ஜெலேந்திரன், ஜெயக்குமார், பாஸ்கர், தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
நிகழ்வு மிகவும் அமைதியான சூழலில் நடைபெற்றது. அம்பேத்கரின் நினைவுகளை மனதில் கொண்டு சமத்துவத்தை நோக்கிய சமூக கட்டமைப்பை உருவாக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்