Wed. Dec 17th, 2025

(State Level Open Category 5 Side Football Tournament)

நிகழ்வு ஏற்பாடுகள்:
மரியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி & மரியன் யுனிசெக்ஸ் ஜிம்,
அனுமந்தீர்த்தம், ஊத்தங்கரை தாலுகா, கிருஷ்ணகிரி மாவட்டம்.

இடம்: SVM கல்லூரி ஆண்கள் விடுதி அருகிலுள்ள மைதானம், அனுமந்தீர்த்தம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அனுமந்தீர்த்தத்தில் மரியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான 5 நபர் கால்பந்து போட்டி இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

மொத்தம் 16 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறந்த அணிகள் இப்போட்டியில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தின. ஆட்டம் தொடக்கம் முதல் இறுதிவரை பரபரப்பாக நடைபெற்றது.

🏆 போட்டி முடிவுகள்:

முதல் பரிசு – கேரளா அணி (Kerala Team)

இரண்டாம் பரிசு – TFC அணி

மூன்றாம் பரிசு – மரியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி


சிறப்பு விருந்தினர்கள்:

வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கி கௌரவித்தவர்கள்:

திரு. P. பழனிதுரை M.A., B.P.Ed., B.Ed., P.G. Dip in Yoga
(டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றவர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரூர்)

திரு. க. சுரேஷ் (AGRI)

திரு. P. சரவணன் B.A.
(ஊராட்சி எழுத்தர், காட்டேரி)


நன்றியுரை:

போட்டியில் பங்கேற்ற வீரர்கள், ஒத்துழைப்பு செய்த காவல் துறை, மற்றும் விளையாட்டை ஊக்குவித்து ஆதரவு வழங்கிய பொதுமக்கள் அனைவருக்கும் மரியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி & மரியன் ஜிம் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.

வே. பசுபதி
தலைமை செய்தியாளர்

By TN NEWS