Fri. Dec 19th, 2025

 

தருமபுரி:
பையர்நத்தம் பகுதியில் இரண்டு முக்கியமான திட்டப் பணிகள் இன்று தொடங்கப்பட்டன.

பையர்நத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் (MGNREGS) மூலம் ரூ.7.30 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுசுவர் மற்றும் நூற்றாண்டு வளைவு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

அதேபோல், பையர்நத்தம் – போதக்காடு இடையே தரமான தார் சாலை அமைக்கும் ரூ.2.39 கோடி மதிப்பீட்டிலான மிகப்பெரிய சாலைத் திட்ட பணியும் இன்று தொடக்கம் கண்டது.

தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது:

இந்த இரு திட்ட பணிகளுக்கான தொடக்க விழா ஒன்றிய கழக செயலாளர் பி. எஸ். சரவணன் தலைமையில் நடத்தப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் மற்றும் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி. பழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு திட்ட பணிகளுக்கான பூமி பூஜை செய்தும், அடிக்கல் நாட்டியும் பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் வெங்கடாசலம், சாந்தி,
கிளைக்கழக செயலாளர்கள் சங்கர், வா. விஜயன், பூக்கடை வெங்கடேசன், குறிஞ்சி வெங்கடேசன், கதிரி முருகன்,
ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் கார்த்திக்,
ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தினேஷ்,
சார்பு அணி நிர்வாகிகள், சி. கண்ணன், ராஜா (எ) வெங்கடாசலம், சி. செல்வம், செந்தூரன், உதயசூரியன், ச. இளமாறன், தீனதயாளன், நாகலட்சுமி, செந்தில் முருகன், சிதம்பரம், அய்யனார்,பள்ளி SMC தலைவர் வாணி நாகராஜ், ஓ. சின்னு, கதிரி பழனி, ரகுநாதன், சின்னபையன், ஞானவேல், நந்தன், இராஜசேகரன், பிரபு, அண்ணாதுரை, ராமஜெயம் ஆகியோர் மேலும் கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மண்டல செய்தியாளர்:
ராஜீவ் காந்தி

By TN NEWS