


தென்காசி, நவம்பர் 30:
தென்காசி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் முக்கிய பூத் கமிட்டி மாநாடு இன்று தென்காசி விடிஎஸ்ஆர் மகாலில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் இருந்த கட்சித் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாடு உற்சாகமான சூழலில் நடந்தது.
மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் திவான் ஒலி தலைமை வகித்தார். தொடர்ந்து மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாபர் அலி உஸ்மானி, நெல்லை மண்டல தலைவர் சிக்கந்தர், மாவட்ட துணைத் தலைவர் முகமது நயினார், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் சேக் முகமது ஒலி, மாவட்ட செயலாளர்கள் சீனா, சேனா, சர்தார், அப்துல் பாசித், நூர்முகமது, பொருளாளர் யாசர்கான் எம்.சி, செயற்குழு உறுப்பினர் அஸ்கர் அலி, மகளிரணி மாவட்ட தலைவி பரக்கத் நிஷா, செயலாளர் சுலைகாள், வேளாண் அணி ஒருங்கிணைப்பாளர் முகமது காசிம், இணை ஒருங்கிணைப்பாளர் அன்சாரி, வர்த்தக அணி தலைவர் முஹம்மது கனி, செயலாளர் தமீம் அன்சாரி, தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் ஹக்கீம், தென்காசி தொகுதி தலைவர் பீர் முகமது, செயலாளர் செய்யது அலி பாதுஷா, கடையநல்லூர் தொகுதி தலைவர் ஹக்கீம் சேட், செயலாளர் சாஜித் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.
மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர்கள் நிஜாம் முகைதீன், கரீம், அகமது நவவி ஆகியோர் கலந்து கொண்டு முக்கிய வழிகாட்டும் உரைகளை வழங்கினர்.
மேலும், மாநாட்டின் சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு, பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான செயல்திட்டங்கள், எதிர்கால நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய ஆலோசனைகளை வழங்கி மாநாட்டு பேருரையையும் ஆற்றினார்.
மாணவ–மாணவிகளுக்கு பாராட்டு:
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்து முன்னிலை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
மாநாட்டில் பல பொதுநல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமானவை:
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு விரோதமான “விதைகள் சட்டம் 2025” வரைவு மசோதாவை அரசு கைவிட வேண்டும்.
மாவட்ட மக்களின் அடிப்படை வசதிகள், கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம் போன்ற துறைகளில் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
முடிவில், மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் நன்றி தெரிவித்து மாநாடு நிறைவுற்றது.
செய்தியாளர்:
J. அமல்ராஜ், தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர் – தமிழ்நாடு டுடே
