Thu. Dec 18th, 2025



குடியாத்தம் – நவம்பர் 28:
வரும் தேர்தல்களை முன்னிட்டு வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மாவட்டத்தில் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான வே. இரா. சுப்புலட்சுமி அவர்கள் இன்று காலை குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது, வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான படிவங்கள் சரியாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா, அவை வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களால் நேர்மறையாக பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை நேரில் கண்காணித்து பார்வையிட்டார்.

அத்துடன், ஆன்லைன் பதிவேற்றம், ஆவண சோதனை, துல்லிய கணக்கீடு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் நடைபெறும் பணிகளையும் விரிவாக ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் தேவையான உத்தரவுகளை வழங்கினார்.

இந்த ஆய்வில் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரான வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி, உதவி வாக்காளர் பதிவு அலுவலரான குடியாத்தம் வட்டாட்சியர் கே. பழனி ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி: குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS