சேலம் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் 2-வது மாநில மாநாட்டை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் – சேலம் மாவட்ட தலைவர் ஞானசேகர் தலைமையில் நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு தொடர்பாக, சேலம் சாந்தாஸ்ரமம் மஹாலில் மண்டல ஆலோசனை கூட்டம் மாநில நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
புதிய மாவட்ட நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டனர்.
சிறப்பாக பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பத்திரிக்கையாளர்களை அவமதித்த சீமானின் செயலுக்கு கூட்டத்தில் வன்மையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என கூட்டத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
மாநாடு தொடர்பான முடிவுகள்:
வரும் 2026 பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ள மாநில மாநாட்டிற்கு
அனைத்து மாவட்டங்களும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பல்வேறு செயல்பாட்டு தீர்மானங்களும் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
பங்கேற்றவர்கள்:
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்று கூட்டத்தை சிறப்பித்தனர்.
தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்திற்கு மாநிலம் முழுவதும் வரவேற்பு:
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் பொதுமக்கள் நலனுக்காக பல்வேறு சேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம்,
தமிநாட்டில் மட்டும் அல்லாது வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மண்டல செய்தியாளர்
ராஜீவ்காந்தி