Wed. Dec 17th, 2025

 

இந்திய பொருளாதாரம் கடந்த இருபது ஆண்டுகளில் இரண்டு வேறுபட்ட அரசியல்–பொருளாதார அணுகுமுறைகளைக் கண்டுள்ளது. அதில், நிதி அமைச்சராகவும் பின்னர் 10 ஆண்டுகள் பிரதமராகவும் இருந்த பொருளாதார நிபுணர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் 2014 முதல் தொடர்ச்சியாக ஆட்சி செய்யும் நரேந்திர மோடி அரசு ஆகிய இரண்டின் காலத்திலும் ரூபாய் மதிப்பின் நிலைமைப் பெரும் விவாதத்திற்குரியது.

மன்மோகன் சிங் ஆட்சியில் ரூபாய் கட்டுக்குள் இருந்தது. வீழ்ச்சி 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகள்:

உலக பொருளாதார நெருக்கடிகள், எண்ணெய் விலை உயர்வு, 2008–09 உலக மந்தநிலை ஆகியவற்றைச் சந்தித்தபோதும்,
ரூபாய் மதிப்பு மிகக் குறைந்த அளவிலேயே வீழ்ச்சியடைந்தது மொத்தம் 20% மட்டுமே.

சராசரியாக 1 USD ≈ ₹50 என்ற நிலை தொடர்ந்தது.

இதனால் கடன்சுமை அதிகரிப்பது குறைத்து நிறுத்தப்பட்டது.

உதாரணம்:
நாடு $2 பில்லியன் (₹10,000 கோடி) கடன் எடுத்தால், 5% வட்டி சேர்த்து மொத்த செலவு சுமார் ₹12,763 கோடி தான்.
ரூபாய் நிலைத்திருந்ததால், நாணய மதிப்பு இழப்பால் கூடுதல் சுமை ஏதும் வரவில்லை.

மோடி ஆட்சி (2014–2025): ரூபாய் தொடர்ந்த வீழ்ச்சி 2014 மே மாதத்திலிருந்து:

ரூபாய் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் புதிய அடித்தளத்துக்குக் குறைந்து கொண்டே வருகிறது.மொத்தம் 12 ஆண்டுகளில் சுமார் 50% வீழ்ச்சி. 1 USD இப்போது ₹83–₹85 எல்லைக்குள்.

இதன் விளைவு:

அதே ₹10,000 கோடி மதிப்புள்ள கடனை வாங்கினால்?

வட்டி + ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் ஏற்படும் கூடுதல் செலவினம் சேர்ந்து நாட்டின் கடன் சுமை பல மடங்கு அதிகரிக்கிறது. நாட்டின் மொத்த கடன் மூன்று மடங்கு உயர்வு, மன்மோகன் சிங் காலத்தில்: ₹55 லட்சம் கோடி

இன்று (மோடி ஆட்சியில்): ₹185 லட்சம் கோடி (கிட்டத்தட்ட மூன்று மடங்கு)

நாணய வீழ்ச்சி: கடன் உயர்வு – இறக்குமதி செலவு அதிகரிப்பு ஆகியவை, நாட்டை கடன் வலையில் ஆழமாக தள்ளுகிறது.
ரூபாய் வீழ்ச்சி: நாட்டின் சுயாட்சி மீது ஆபத்து

ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே போனால்:

கடன் கொடுத்த நாடுகள் நிபந்தனைகளை திணிக்க ஆரம்பிக்க முடியும், நாட்டின் வளங்களை கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும், இலங்கை, பாகிஸ்தான் மீது சீனா பெற்ற கட்டுப்பாடு போன்று, தென் அமெரிக்க நாடுகள் மீது அமெரிக்கா பெற்ற செல்வாக்கு போன்று, நமது பொருளாதாரம் ஆபத்தில் சிக்கக்கூடும்.


ஷேக் முகைதீன்.

By TN NEWS