Fri. Dec 19th, 2025



தர்மபுரி மாவட்ட சமூகநலத்துறை சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி மற்றும் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சி இன்று தர்மபுரி நகரப் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இவ்விழிப்புணர்வு நிகழ்வில் சமூகநலத்துறை அலுவலர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பல்வேறு தொண்டு நிறுவன பிரதிநிதிகள், பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

பெண் குழந்தையின் பாதுகாப்பு – கல்வி – எதிர்கால முன்னேற்றம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில், கலை நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு உரைகள் நிகழ்த்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நகரின் முக்கிய சாலைகளில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. “பெண் குழந்தை பாதுகாப்பு – சமூகத்தின் பொறுப்பு”, “கல்வியே பெண்களின் பலம்” போன்ற கோஷங்களை எழுப்பிய பொதுமக்கள் பயணிகளின் கவனத்தை ஈர்த்தனர்.

பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் உரிமைகள், பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டம் (POCSO), குழந்தைகள் திருமணம் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

T.K.P. செந்தில் ராஜா
மாவட்ட செய்தியாளர்
தருமபுரி மாவட்டம்

By TN NEWS