Sun. Dec 21st, 2025

மழை–வெள்ள பாதிப்பில் இருந்த போதக்காடு மக்களை நேரில் சந்தித்த பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் B.S. சரவணன்.

தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியம்.

வடகிழக்கு பருவமழையால் தொடர்ந்து பெய்த கனமழையின் தாக்கமாக, பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட போதக்காடு ஊராட்சி மாரியம்மன் கோவிலூர் பகுதியில், ஓடையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள், குறிப்பாக பள்ளி மாணவ. மாணவிகள், விவசாய குடும்பங்கள், பொதுமக்கள்
பாதிக்கப்பட்டவர்கள்.

இந்த தகவலை அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு B.S. சரவணன், இன்று பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்குச் சென்று நேரில் பார்வையிட்டார்.

பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி, குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தகவல்கள் தரப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக தற்போதைய பிரச்சினைகள்
மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் சிரமம், வெள்ளநீர் ஊடுருவி ஏற்பட்ட பாதிப்பு என அனைத்தையும் விரிவாக கேட்டறிந்த அவர்,பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையான
ஓடைக்குக் குறுக்கே சிறுபாலம் அமைத்தல் மிக அவசியம் என்பதை நேரில் உணர்ந்தார்.

இதனை தொடர்ந்து, அவர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தீர்வு காண நடவடிக்கை எடுத்தார். அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கைகள் எடுக்க உறுதியளித்தார்கள்.

செயலாளர் தகவலின் பேரில், போதக்காடு பகுதிக்கு உடனே விரைந்து வந்தவர்கள்:
பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர், திரு. அப்துல்கலாம் ஆசாத், வட்டார வளர்ச்சி அலுவலர், திரு அறிவழகன், ஒன்றிய பொறியாளர் திலீபன்
இவர்கள் பாதிப்பு ஏற்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்து,
சிறுபாலம் கட்டுவதற்கான உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று மக்களுக்கு உறுதியளித்தனர்.

மண்டல செய்தியாளர்
ராஜீவ்காந்தி

 

By TN NEWS