தர்மபுரி, நவம்பர் 24, 2025:
தர்மபுரி புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட பத்திரிக்கையாளர் அரங்கம் (Press Room) இன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் திரு. சதீஷ் அவர்கள் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி, சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, மாவட்ட மக்கள் செய்தி தொடர்பாளர் லோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் மாவட்டத்தின் பல்வேறு பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த நிருபர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் D. ராஜீவ் காந்தி, மாவட்ட செயலாளர் பெ. அசோக், பொருளாளர் A. சக்தி கணேசன், தகவல் டுடே செய்தியாளர் மேரி, சங்க நிர்வாகிகள் ஆறுமுகம் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.
பத்திரிக்கையாளர் அரங்கத்தை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியருக்கும், விழாவில் கலந்து கொண்ட அனைத்து நிருபர்களுக்கும் தமிழ்நாடு டுடே மற்றும் தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் சார்பில் நன்றியும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது.
மண்டல செய்தியாளர்
ராஜீவ் காந்தி

