வேலூர் மாவட்டம்; நவம்பர் 25
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி, சோனியா நகர் பகுதியில் வசித்து வந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 19 நபர்கள், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கொல்லை மடுவு பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில், மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர் சின்னம்மாள் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
தலைமை அதிகாரிகள் உடனடி தலையீடு:
மனுவைத் தொடர்ந்து, வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர், ஆந்திர மாநில சித்தூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தகவல் கொடுத்து நடவடிக்கை கோரினார்.
அதன்பேரில், ஆந்திர மாநில வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சின்னம்மாளின் உறவினர்கள் உட்பட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 19 பேரை மீட்டு, நேற்று இரவு குடியாத்தம் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
கடிதச் சான்றில் ஏற்பட்ட சிக்கல்:
ஆனால், ஆந்திரா மாநில அதிகாரிகள் வழக்கப்படி வழங்க வேண்டிய முறையான கடிதத்தை வழங்கவில்லை.
இதனால், மீண்டும் அந்த 19 நபர்களையும் ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று, தேவையான மீட்பு சான்று (Release Certificate) பெற்று வந்து, குடியாத்தம் வருவாய் கோட்டாச்சியர் சுபலட்சுமி அவர்களிடம் ஒப்படைத்தனர்.
இதன் மூலம், இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 19 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு தங்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே. வி. ராஜேந்திரன்