Sun. Dec 21st, 2025

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் பகுதியில், சட்டவிரோதமாக நடைபெற்று வந்த மது விற்பனை குறித்து தட்டி கேட்ட சமையல் மாஸ்டர் அன்சாரி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் சட்டவிரோத மது விற்பனையை எதிர்த்து வந்த அன்சாரி, நேற்று இரவு தனது வீட்டருகே வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார். தகவல் அறிந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பாம்பன் பகுதியில் பதற்றம் நிலவியது.

சமையல் தொழிலில் ஈடுபட்டு வந்த அன்சாரியை கொலை செய்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் இராமேஸ்வரத்தில் மாணவி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் இன்னும் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கும் சூழலில், இந்த நிகழ்வு மக்கள் மத்தியில் கவலையை அதிகரித்துள்ளது.

செந்தில்குமார் – மாவட்ட செய்தியாளர்




By TN NEWS