Mon. Dec 22nd, 2025

21.11.2025
சென்னை – மாதவரம்

M.L. பிரபு தலைமையில் நலத்திட்ட உதவிகள்.

தமிழக வெற்றி கழகம் மாநிலம் முழுவதும் நடத்திவரும் விலையில்லா விருந்தகம் சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை மாதவரம் பகுதியில் ‘பசியில்லா மாதவரம்’ எனும் உணவு வழங்கும் சமூகப் பணித் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

திருவள்ளூர் தென்மேற்கு மாவட்ட கழக செயலாளர்
வழக்கறிஞர் M.L. பிரபு B.A., LL.B., M.Sc (C.P), DIS
அவர்கள் தலைமையில், இந்த திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

வாரத்தில் இரு நாட்கள் இலவச உணவு:

இந்த திட்டத்தின் கீழ், வாரந்தோறும், வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை, விஜய் அவர்களின் நலத்திட்ட நோக்கத்தினைப் பின்பற்றி ‘பசியில்லா மாதவரம்’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நலத்திட்ட உதவிகள்:

திட்ட தொடக்க விழாவைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சமூக நலனை நோக்கமாகக் கொண்ட இந்த முயற்சி உள்ளூர் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

பெரும் திரளான கழக நிர்வாகிகள் பங்கேற்பு:

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட, பகுதி, ஒன்றியம், நகரம், வட்டம்,
ஊராட்சி மற்றும் கிளை கழக நிர்வாகிகள்,
மேலும் பிற தோழமை அணியின் நிர்வாகிகளும்
பெரும் அளவில் பங்கேற்றனர்.

தமிழ்நாடு டுடே
சென்னை மாவட்ட செய்தியாளர்
எம். யாசர் அலி

By TN NEWS