Mon. Dec 22nd, 2025

திருவள்ளூர், நவம்பர் 20

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே, ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 6 கிலோ குட்கா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சோதனை சாவடியில் அதிரடி:

ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில், எஸ்.எஸ்.ஐ சேகர் தனிப்பிரிவு போலீஸ் பொறுப்பு செந்தில்குமார் உட்பட போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, ஆந்திராவின் நாகலாபுரம் பகுதியில் இருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை நோக்கி வந்த இருசக்கர வாகனம் சந்தேகத்துக்கு இடமாக இருந்தது. வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பையில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது.

பறிமுதல் செய்யப்பட்டவை, குட்கா – 6 கிலோ, பயன்படுத்திய இருசக்கர வாகனம்,இவை அனைத்தும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது நடவடிக்கை மற்றும் விசாரணை:

விசாரணையில், குற்றத்தில் ஈடுபட்டவர்
பாகல்மேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சுகுமார் (46) என்பது தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சுகுமார் திருவள்ளூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

ஊத்துக்கோட்டை போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர்
மா. மருதுபாண்டி

By TN NEWS