நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
தென்காசி நகரில் உள்ள ஈஸ்வரன் பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் புதிய பொது நூலகம் திறக்கப்பட்டதை தொடர்ந்து, நூலகத்திற்கான பின்வாசல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், தற்போது மெயின் கேட் வழியாகவே மக்கள் உள்ளே சென்று வருகின்றனர்.
இதன் காரணமாக, பள்ளி மைதானத்தின் உள் பகுதி வழியாக கார்கள், பைக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் நேரடியாக இயக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இது தினசரி விளையாடும் மாணவர்களின் பாதுகாப்புக்கு நேரடி ஆபத்தாக இருப்பதாக பெற்றோர்கள், பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளார்.
முழு தென்காசி பகுதியில் அனைத்து விளையாட்டு பயிற்சிகளுக்கும் ஏற்ற ஒரே மைதானம்
தென்காசி சுற்றுவட்டாரத்தில்
கிரிக்கெட்
வாலிபால்
புட்பால்
நடைபயிற்சி
போன்ற அனைத்து விளையாட்டுகளுக்கும் ஏற்றதாக உள்ள ஒரே மைதானம் இதுவே என்பதால், இங்கு வாகனங்கள் நுழைவது விபத்துக்களுக்கு காரணமாகலாம் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்தை பள்ளியின் பின்புறம் மாற்ற கோரிக்கை
வாகன நுழைவு காரணமாக மாணவர்களுக்கு அபாயம் ஏற்படாதவாறு,
போக்குவரத்து வழியை பள்ளியின் பின்புறம் மாற்ற,
பின்வாசலை திறந்து தனி அணுகுமுறை ஏற்படுத்த
தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட பள்ளிக்கல்வி துறைக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தகவல் வழங்குபவர்:
TNT AMALRAJ, தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர் – தமிழ்நாடு டுடே
