Wed. Nov 19th, 2025



குடியாத்தம் (நவம்பர் 12):
சுதந்திரப் போராட்ட வீரர் கொடிகாத்த குமரன் அவர்களின் தியாக வாழ்வை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளவும், குடியாத்தம் நெசவாளர்களின் வரலாற்றுப் பெருமையை வெளிப்படுத்தவும், குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் கொடிகாத்த குமரன் திருவுருவச் சிலை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு. டி.எம். கதிர் ஆனந்த் அவர்களை நேரில் சந்தித்து, வேலூர் மாவட்ட கொடிகாத்த குமரன் தொண்டு மன்றம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

மனுவை அளித்தவர்களில்,
மாவட்ட அவைத் தலைவர் ப. ஜீவானந்தம்,
மாவட்ட பொதுச்செயலாளர் முனைவர் வே. வினாயகமூர்த்தி,
பொருளாளர் கோ. ஜெயவேலு,
துணைத் தலைவர் மா.கோ. ஞானசேகர் ஆகியோர் இடம்பெற்றனர்.

மனுவை பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அவர்கள், கொடிகாத்த குமரன் சிலை அமைக்கும் விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

📸 செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்

குடியாத்தம் தாலுக்கா செய்திகள்

By TN NEWS