“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியில் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடிய கலெக்டர் கந்தசாமி.
உள்ளடக்கம்:
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் “காபி வித் கலெக்டர்” என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்ட செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் போது கலெக்டர் கந்தசாமி பேசும்போது,
மாவட்டத்தின் சிறப்புகளை வெளிக்கொணரும் வகையில் பத்திரிகையாளர்கள் அதிகம் எழுத வேண்டும் என்றும், சுற்றுலா தளங்களைப் பற்றிய செய்திகளை வெளியிட ஊக்கமளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பத்திரிகைகளில் வெளியாகும் பொதுச் செய்திகள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி தீர்வு காணப்படும் என்றும் கூறினார்.
மேலும், பத்திரிகையாளர்கள் அல்லாதவர்கள் தங்களது வாகனங்களில் PRESS அல்லது ஊடகம் என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டினால், அதற்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கந்தசாமி எச்சரித்தார்.
செய்தி: ராமர்
