Wed. Nov 19th, 2025


குடியாத்தம், செப்டம்பர் 8:

வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், நகர கழகச் செயலாளர் ஜே.கே.என். பழனி அவர்களின் தலைமையில், இன்று சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஆர்.எஸ். ரோடு ஸ்ரீ வைஷ்ணவி மஹாலில் பூத் (BLA-2) முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக வேலூர் புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் த. வேலழகன் மற்றும் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர், முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி என். ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணைச் செயலாளர் அமுதா சிவப்பிரகாசம், மாவட்ட சார்பணி செயலாளர்கள் மாலிபட்டு பாபு, ரமேஷ்குமார், அன்வர் பாஷா, வழக்கறிஞர் கோவிந்தசாமி, கழக நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பூங்கொடி, மூர்த்தி, சலீம், அட்சயா, வினோத்குமார், நகர மன்ற உறுப்பினர்கள் லாவண்யா, குமரன், ரேவதி, மோகன், சிட்டி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் நகரத்தில் உள்ள 81 பூத் (BLA-2) நிர்வாகிகள் ஒருங்கிணைந்து கலந்துகொண்ட இந்த ஆலோசனை கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS