நாகப்பட்டினம் நவம்பர் 8:
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவில் நடைபெற்று வரும் கந்தூரி விழா மற்றும் பல்வேறு ஆய்வு பணிகளில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று நேரில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் எஸ். எம். நாசர் அவர்களும் இணைந்து கலந்துகொண்டார். இரு அமைச்சர்களும் தர்கா வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் விக்னேஷ் தெரிவித்தார்.
