வேலூர் மாவட்டம், செப்டம்பர் 8:
குடியாத்தம் ஒன்றிய பாக்கம் ஊராட்சியின் செல்வ பெருமாள் நகரில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் (2020–2021) திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் 90 ஆயிரம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் அமைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம் ரிஹாயானா தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயபாரதி மணவாளன் வரவேற்புரை ஆற்றினார்.
புதிய அங்கன்வாடி மையத்தை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் எண்.இ. சத்யானந்தம் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். பின்னர் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டி. கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, சரவணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசுமதி விஜயராஜ், அங்கன்வாடி மேற்பார்வையாளர் கமலா, ஊராட்சி செயலாளர்கள் ராஜா மற்றும் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் அங்கன்வாடி பணியாளர் தீபா நன்றி கூறி விழாவை நிறைவு செய்தார்.
செய்தி: குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
