Wed. Nov 19th, 2025



தருமபுரி, நவம்பர் 4:
தருமபுரி நகராட்சிக்கு அருகிலுள்ள ஏ.ரெட்டிஅள்ளி கிராமம், சோகத்தூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் ரூ.39.14 கோடி மதிப்பீட்டில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய தருமபுரி நகராட்சி பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

அதேபோல், தருமபுரி வட்டம் அதகபாடி கிராமம் மற்றும் நல்லம்பள்ளி வட்டம், தடங்கம், அதியமான்கோட்டை, பாலஜங்கமனஹள்ளி ஆகிய கிராமங்களில் மொத்தம் 1,733 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள தருமபுரி சிப்காட் தொழிற்பூங்காவில் உட்புற சாலைகள், மழைநீர் வடிகால் உள்ளிட்ட உட்கட்டமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த இரு முக்கியமான பணிகளின் முன்னேற்ற நிலையை தமிழக முதலமைச்சர் திரு. எம்.கே. ஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் மற்றும் தேர்தல் வடக்கு மண்டல பொறுப்பாளர் திரு. இ.வீ. வேலு, தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் மற்றும் வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவக்குமார், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. சேலம் ராஜேந்திரன், தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. சதீஷ், திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மண்டல செய்தியாளர்: டி. ராஜீவ்காந்தி

By TN NEWS