Wed. Nov 19th, 2025



குடியாத்தம், நவம்பர் 4:
இந்திய தொழிற்சங்க மையம் (CITU) 16வது தமிழ்நாடு மாநில மாநாடு நவம்பர் 6 முதல் 9 வரை கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, சேலம் சிறை தியாகிகள் நினைவு ஜோதி பயணக் குழு 4 நவம்பர் காலை 10.30 மணிக்கு குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகில் வந்தது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சி சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத் தலைவர் தோழர் சி. சரவணன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் சி.ஐ.டி.யூ. பீடி சங்க தாலுக்கா தலைவர் தோழர் ஆர். மகாதேவன், கட்டுமான சங்க மாவட்ட இணைச் செயலாளர் தோழர் எம். ராஜா, பீடி சங்க நிர்வாகிகள் ஆர். குமார், டி. தண்டபாணி, ஜி. மார்கபந்து, எம். அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பயணக் குழுவில் சி.ஐ.டி.யூ. மாநில இணைச் செயலாளர் தோழர் சி. நாகராஜ், வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் தோழர் எஸ். பரசுராமன், மாவட்ட துணைத் தலைவர் தோழர் எ. பழனியப்பன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் தோழர் கே. சாமிநாதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் தோழர் பி. காத்தவராயன், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் தோழர் பி. குணசேகரன், DREU தோழர் கே. முருகானந்தம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் தோழர் எஸ். சூரியா, பீடி சங்க மாவட்ட பொருளாளர் தோழர் ஆர். மணிமாறன், மாதர் சங்க தோழர் லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS