Wed. Nov 19th, 2025



நவம்பர் 3, குடியாத்தம்:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இன்று (நவம்பர் 3) காலை காட்பாடி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் வட்டாட்சியர் கே. பழனி, பேரணாம்பட்டு வட்டாட்சியர் ராஜ்குமார், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர்கள் அசோக் குமார், செந்தில், புகழரசன் உள்ளிட்டோர், கிராம நிர்வாக அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்

 

By TN NEWS