

தேனி மாவட்டம், கம்பம் – அக்டோபர் 30, 2025:
தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, கம்பத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் உயர்திரு P.L.A. ஜெகநாத்மிஸ்ரா அவர்கள் தலைமையேற்றார்.
நிகழ்வில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கூடல் C. செல்வேந்திரன், மாநில ஊடகப்பிரிவு அமைப்பாளர் அபுதாஹீர், மாநில பொறுப்பாளர்கள் கம்பம் பன்னீர்செல்வம், தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் A. திருப்பதி, பெத்தனசாமி, போக்குவரத்து தொழிற்சங்க பிரிவு அமைப்பாளர் பாளையம் A. நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் லதா, மாவட்ட மகளிர் அமைப்பாளர் கிருஷ்ணவேணி, கம்பம் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் கலா ராணி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் T.S.A. அருண்குமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் K.R. பாஸ்கரன், கம்பம் நகர செயலாளர்கள் சுப்பிரமணி (தெற்கு), அய்யர் (வடக்கு) மற்றும் பல கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் தேவர் அவர்களின் சமூக நீதி, ஒற்றுமை மற்றும் தன்னம்பிக்கை கொள்கைகள் குறித்து நினைவுகூரப்பட்டது.
செய்தி தொடர்பு:
மு. அன்பு பிரகாஷ்
தேனி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர்
