

தேனி | அக்டோபர் 30
தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா, தேனி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை தாங்கியவர்
திரு. சீ. காசிமாயன், I.D.S., மத்திய அமைச்சகம் இணை இயக்குநர்.
நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தவர்கள்:
கம்பம் DNT இளைஞர் அணி (சீர்மரபினர் நலச்சங்கம்),
நேதாஜி இளைஞர் மன்றம்,
வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் A. கவுதமன்,
மாநில செயலாளர் தா. ஜெயக்குமார்,
இளைஞர் அணி செயலாளர் ஆச்சி S. ராஜ்குமார்,
IT Wing மாநில தலைவர் P.K. பிரதாப்,
மாணவர் அணி செயலாளர் P. நதிஷ்குமார்,
சீ. கவியரசன், DNT அபினேஷ் உள்ளிட்ட பல முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
🔹 பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பெருமை சேர்த்தது:
விழாவில் பயமறியான் பூலித்தேவன் சிலம்ப பள்ளி சார்பில்,
ஆசிரியர் K. சத்தியாபிரியா தலைமையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சிலம்பம், வேல்கம்பு, சுருள் வாள், சக்கர பந்து, வாள் ஆகிய கலையின் சிறப்புகள் நிகழ்வில் காட்சியளித்தன.
இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.
🔹 மரியாதை செலுத்தல்:
நிகழ்ச்சியில் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுடன்,
அவரது சமூக நீதி, சமத்துவம், தேசப்பற்று குறித்து உரைகள் நிகழ்த்தப்பட்டன.
📸 செய்தி & புகைப்படம்:
மு. அன்பு பிரகாஷ்
தேனி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர்
