Mon. Jan 12th, 2026

உத்தமபாளையம் அருகே பயங்கரமான சாலை விபத்து , ஒருவர் பலி.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பஸ் நிலையம் அருகே இன்று (28.10.2025) காலை பயங்கரமான சாலை விபத்து ஏற்பட்டது.

அந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.

தகவல் அறிந்த உடனே உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்

By TN NEWS