Wed. Nov 19th, 2025



💐💐கபாடி களத்தில் சமூக மரபுகளை உடைத்த 17 வயது தங்க மகள் 💐💐கார்த்திகா💐💐

சென்னையின் பல்வேறு இடங்களில் வசித்திருந்த பூர்வக்குடி மக்களை குடியேற்றும் நோக்கில் 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கண்ணகி நகர், இன்று 20,000க்கும் மேற்பட்ட குடும்பங்களின் இல்லமாக விளங்குகிறது.
தூய்மை பணியாளர்கள், தினக்கூலிகள் என உழைக்கும் மக்கள் வாழும் இந்த பகுதி, நகரத்தின் இயக்க சக்தியாக இருந்தாலும், நீண்ட காலமாக அடிப்படை வசதிகளில் புறக்கணிக்கப்பட்டது.

ஒரு காலத்தில் “கண்ணகி நகர்” என்ற பெயரைச் சொல்லவே சிலர் தயங்கினர்.
ஆனால் இன்று அதே பெயர் — வீரம், தன்னம்பிக்கை, பெருமை என்ற அடையாளமாக மாறியுள்ளது.
அதற்குக் காரணம்: Universal Kannagi Nagar Women’s Kabaddi Club!

.   

💪 கபாடி களத்தில் எழுந்த கண்ணகி நகர் மகள்கள்:

பெண்கள் கபாடி அணியை உருவாக்குவது எளிதல்ல —
பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகத்தில்,
அப்பா, அம்மா இருவரும் தினக்கூலிகள்;
பெண்களை விளையாட அனுப்புவது ஒரு சவால்;
விளையாட்டு மைதானம் கூட கிடைப்பது கடினம்.

ஆனால் அந்த அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து
“கண்ணகி போல வீரத்துடன்” மைதானத்தில் இறங்கிய இந்த இளம் வீராங்கனைகள், இன்று தமிழ்நாடு முழுவதும் பெருமையாக திகழ்கின்றனர்.

SGFI, யூனிவர்சிட்டி, ஜூனியர், சீனியர் எந்த நிலைப்பாட்டிலும் கண்ணகி நகர் வீராங்கனைகள் இல்லாமல் தமிழ்நாடு கபாடி அணி முழுமையடையாது என்பது பெருமை!



🥇 தங்க மகள் கார்த்திகா — இந்தியாவை தங்கம் தழுவச் செய்த வீராங்கனை!

அந்த அணியின் இளம் நட்சத்திரம் — கார்த்திகா, வயது வெறும் 17. தூய்மை பணியாளர் தாயின் மகள்; விளையாட்டின் மூலம் தன் குடும்பத்திற்கும், தன் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பஹ்ரைனில் நடைபெற்ற 2025 ஆசிய இளையோர் கபாடி போட்டியில்,இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டனாக விளங்கி, இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்! 🇮🇳



அவரின் raiding skills எதிரணிகளைச் சாய்த்தது மட்டுமல்ல,
சமூகத்தில் நிலவும் பல மரபுகளையும் உடைத்தெறிந்தது.

“நிறைய பேர் ‘பரிட்சைக்கே அனுப்பாம கபடிக்கு அனுப்பற’ன்னு சொன்னாங்க. ஆனா நாங்க நம்பிக்கையோட அனுப்பினோம். படிப்புலயும், கபடிலயும் ஜெயிச்சு, எங்க பாப்பா யார்ன்னு காட்டிட்டாங்க!” கார்த்திகாவின் தாயார் பெருமிதமாக கூறினார். 😍

இன்று கபாடி பற்றியே எழுதாத ஊடகங்களுக்குக் கூட
“தங்க மகள் கார்த்திகா” என்ற பெயர் பெருமையாக ஒலிக்கிறது.



🌍 விளையாட்டு ஒரு கருவி — சமூக மரபுகளை உடைக்கும் இயக்கம்.

கண்ணகி நகர் பெண்கள், கபாடி விளையாட்டை ஒரு சமூக மாற்ற கருவியாக மாற்றியுள்ளனர்.
அவர்கள் தங்களைப் பற்றிய சமூகம் கொண்டிருந்த பிழையான பார்வையை முழுமையாக உடைத்து,
“நாமும் முடியும்” என்ற நம்பிக்கையை இளம் தலைமுறையிடமும் விதைத்துள்ளனர்.

அவர்களின் பயிற்சியாளர், பெற்றோர், அவர்களை ஆதரித்த NGOக்கள் மற்றும் சமூக இயக்கங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பாராட்டுக்கள்! ❤️

🎓 இளம் கனவுகளுக்கு அரசின் ஆதரவு:

அதேபோல், தஞ்சாவூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் கனிஷ்கா, தனது மருத்துவக் கல்விக்காக கழக இளைஞர் அணிச் செயலாளர் மற்றும் துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் கல்வி உதவி கோரிக்கை மனு அளித்திருந்தார்.

அந்த கோரிக்கையை உடனே ஏற்று, இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் 5 ஆண்டுகளுக்கும் கல்வி உதவி தொகை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
அதன்படி, 2ஆம் ஆண்டிற்கான ரூ. 2 லட்சம் காசோலை
மாணவி கனிஷ்காவிடம் வழங்கப்பட்டது.

சாதனை, கல்வி, விளையாட்டு, இவை அனைத்திலும் சமூக மாற்றத்தின் நம்பிக்கை தெளிவாக தெரிகிறது.

🌐 கார்த்திகா என்னும் கபடி விளையாட்டு சிலையை செதுக்கிய சிற்பி இவர்தான் கோச் ரஜி இப்போ
இவருக்கு 28 வயசு ஆகுது.கண்ணகி நகர் அணி
கபாடி கோட்க்கு வந்து எட்டு வருஷம் ஆகுது.

தன்னுடைய இருபது வயதிலேயே பயிற்சியாளர் ராஜி ஒவ்வொரு வீடு வீடாக சென்று உங்கள் குழந்தைகளை விளையாட அனுப்புங்க என்று கெஞ்சி கூத்தாடி ஆரம்பித்தது தான் இந்த கண்ணகி நகர் டீம். இந்த வீராங்கனைகள் வாங்கும் மெடல்களை எல்லாம் தங்களை செதுக்கிய பயிற்சியாளர்
ராஜி அவர்களில் கழுத்தில் அணிவித்து மகிழ்ந்த பின்பு தான் வீட்டிற்கு எடுத்து செல்கிறார்கள்.. 🔥🔥🔥

🙏 Tamilnadu Today வாழ்த்து:

👑👑 வீரத்தால் தன்னை நிரூபித்த 17 வயது தங்க மகள் கார்த்திகாவிற்கு மற்றும் கண்ணகி நகர் வீராங்கனைகளுக்கு Tamilnadu Today இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது. 🌸

அவர்களின் எதிர்காலம் டியான் சந்த், அர்ஜுனா, த்ரோணாசார்யா விருதுகள் போல ஒளிரட்டும்!

தொகுப்பு : ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்

By TN NEWS