
புதுடெல்லி:
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தப் பணிக்கான அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று (28.10.2025) டெல்லியில் அறிவித்தார்.
🗳️ சிறப்பு வாக்காளர் திருத்த அட்டவணை.
படிவங்கள் அச்சடிப்பு / அதிகாரிகளுக்குப் பயிற்சி: அக். 28 – நவ. 3
வீடு வீடாக கணக்கெடுப்பு: நவ. 4 – டிச. 4
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: டிச. 9
ஆட்சேபனை / திருத்தங்கள் கோரல்: டிச. 9 – ஜன. 8
புகார்கள் சரிபார்ப்பு: டிச. 9 – டிச. 31, 2025
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பிப். 7, 2026
📋 வாக்காளர் உறுதிப்படுத்தல் – முக்கிய அம்சங்கள்
வாக்காளர்களை உறுதி செய்ய 3 முறை வீடு வீடாக அதிகாரிகள் வருவார்கள்.
ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்கள் அடிப்படையில் பெயர் சரிபார்ப்பு நடைபெறும்.
எந்த தகுதி வாய்ந்த வாக்காளர்களின் பெயரும் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.
நாடு முழுவதும் இது 9வது முறையாக நடைபெறும் தீவிர வாக்காளர் திருத்தப் பணி ஆகும்.
🌍 சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறும் மாநிலங்கள்
தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, குஜராத், ராஜஸ்தான், கேரளா, மேற்கு வங்கம், அந்தமான், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், கோவா, லட்சத்தீவு.
இந்த தீவிர திருத்தப் பட்டியல் அடிப்படையில் தான் அடுத்தாண்டு நடைபெறும் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்
