தேனி மாவட்டம் சின்னமனூர் அகமுடையார் மண்டபத்தில் அமைந்துள்ள மாமன்னர் மருது பாண்டியர் சகோதரர் சிலைகளுக்கு, அவர்களின் 224ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு இன்று மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தேனி தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் எம்.ஏ. செல்லத்துரை அவர்கள் தலைமையேற்றார்.
மாவட்ட அவை தலைவர் பி. காசிமாயன், செயற்குழு உறுப்பினர் மிட்டாய் முருகன், சின்னமனூர் நகர தேமுதிக செயலாளர் எம்.ஆர்.எஸ். முருகன் ஆகியோர் முன்னிலையில், சின்னமனூர் நகர பொருளாளர் சுடர் கணேசன், நகர அவைத் தலைவர் மாறையா, கம்பம் நகர தேமுதிக செயலாளர் குமரேசன், அவைத் தலைவர் பாண்டி, கேப்டன் மன்ற துணைச் செயலாளர் கிருஷ்ணன், சின்னமனூர் நகர தேமுதிக துணைச் செயலாளர் சுருளிகாந்த், மாவட்ட பிரதிநிதிகள் அன்பு பிரகாஷ், சரவணக்குமார், சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாமன்னர் மருதுபாண்டியர் சகோதரர்கள் நாட்டிற்காக செய்த தியாகம் குறித்து நினைவு கூரப்பட்டு, அவர்களின் வீரச் செயல்கள் குறித்து பலரும் உரையாற்றினர்.
🖋️ செய்தி தொடர்பாளர்கள்:
மு. அன்பு பிரகாஷ் – தேனி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர்
ஆர். கண்ணன் – தேனி மாவட்ட தலைமை செய்தியாளர்
