Thu. Nov 20th, 2025



வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தின் முக்குன்றம் ஊராட்சியில், ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி சமீம் ரிஷானா தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு பெருந்தலைவர் என்.இ. சத்யானந்தம், ஊராட்சி மன்ற தலைவர் கங்கா ராம், துணைத் தலைவர் ஏகராஜ், கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார், அங்கன்வாடி மேற்பார்வையாளர் கமலா, கிராம உதவியாளர் தீபா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ஊர் பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு புது மையத்தின் திறப்பை உற்சாகமாக வரவேற்றனர்.

இறுதியில் அங்கன்வாடி பணியாளர் ரமணி நன்றி தெரிவித்தார்.

🖋️ செய்தியாளர்: கே.வி.ராஜேந்திரன்

By TN NEWS