Thu. Nov 20th, 2025

🏛️ குடியாத்தம் நகராட்சி 7-ஆம் வார்டில் சிறப்பு கூட்டம் – பொதுமக்கள் கோரிக்கைகள் முன்வைப்பு
📍 குடியாத்தம் – அக்டோபர் 27

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி 7-ஆம் வார்டு சார்பில், கஸ்பா கெளதம் பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு நகர மன்ற உறுப்பினர் கற்பகம் மூர்த்தி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக உதவி பொறியாளர் சுபாஷினி, அலுவலக மேலாளர் சுகந்தி, வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

அப்பகுதி பொதுமக்கள் தங்களின் நீர் வசதி, சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை எழுத்து மனுவாக அளித்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் ஆர். மூர்த்தி நன்றி கூறினார்.

🖋️ செய்தி: கே.வி. ராஜேந்திரன் – குடியாத்தம் தாலுகா செய்தியாளர்

By TN NEWS