அக்டோபர் 27, குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட முக்குன்றம் ஊராட்சியில், P.MAGY 2022–2023 திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி. ஷமீம்ரிஹானா அவர்கள் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஒன்றிய குழு பெருந்தலைவர் திரு. என். இ. சத்யானந்தம் அவர்கள் புதிய அங்கன்வாடி மையத்தை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.
இவ்விழாவில் ஊராட்சி மன்றத் தலைவர் கங்காராம், துணைத் தலைவர் ஏகராஜ், அங்கன்வாடி மேற்பார்வையாளர் கமலா, கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார், கிராம உதவியாளர் தீபா, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் முடிவில் அங்கன்வாடி பணியாளர் ரமணி நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்