Tue. Jan 13th, 2026

திராவிட முன்னேற்ற கழக கூட்டணியின் கொங்கு குடும்ப விழா – ஈஸ்வரன் எம்.எல்.ஏ., பழனியப்பன் முன்னாள் அமைச்சர் இணைந்து கலந்துகொண்டனர்

பாப்பிரெட்டிபட்டி, அக்டோபர் 25:
திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், H. புதுப்பட்டி AKP திருமண மண்டபத்தில் நடைபெற்ற கொங்கு குடும்ப விழா மற்றும் வள்ளி கும்மி நிகழ்ச்சி வண்ணமயமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கட்சித் தலைவர் திரு. E.R. ஈஸ்வரன் (BE., MLA) அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

அவருடன் தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. P. பழனியப்பன் (M.Sc., Ph.D.,) கலந்து கொண்டு மக்களை வாழ்த்தி உரையாற்றினார்.

மேலும் பாப்பிரெட்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சி. முத்துக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

மண்டல செய்தியாளர்: D. ராஜீவ் காந்தி

By TN NEWS