Thu. Nov 20th, 2025

 


அக்டோபர் 17 – குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை கிராம உதவியாளர்கள் வட்ட செயற்குழு கூட்டமும் புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வட்டத் தலைவர் பிரகாஷ் தலைமையிலும், வட்ட செயலாளர் மணிவண்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது.

மாநிலத் துணைத் தலைவர் டி. துரைராஜ் சிறப்புரையாற்றினார்.

இதில் வட்டத் தலைவர் டி. ஆதி கேசவன், மாவட்ட பொருளாளர் ஆர். ஆசைதம்பி, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். வினோத்குமார், மாவட்டத் துணைத் தலைவர் எம். வீர மணிகண்டன், அணைக்கட்டு வட்டத் தலைவர் சி. வடிவேல், கே.வி.குப்பம் கிராம உதவியாளர்கள் இ. ருத்ரமூர்த்தி, ஆர். சிதம்பரம், எஸ். சதீஷ்குமார், எஸ். கந்தன் செல்வன், எஸ். இன்பரசன், குடியாத்தம் வசந்தகுமார், உமாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

புதிய வட்ட நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று, வரையறுக்கப்பட்ட காலை முறை ஊதியம் தொடர்பான கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதை நினைவு கூறினர்.

2026 ஆண்டுக்கான சங்கச் சந்தா தொகையை முழுமையாக செலுத்தி முதலிடத்தில் இருப்பது குறித்து பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

எதிர்கால சங்க நடவடிக்கைகள் குறித்து பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுகா செய்தியாளர் 📰

 

By TN NEWS