Thu. Nov 20th, 2025



நாள் : 17 – 10 – 25

தஞ்சை ஏஞ்சல்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி.. இப்பள்ளியானது கடந்த 20 வருடங்களாக திருக்கானூர் பட்டியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளி ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கும் பள்ளியாகும்.

ஆனால் இப்பள்ளியின் மாணவ மாணவியர் சிறந்த  தமிழ் ஆர்வலர்களாகவும், நிகரற்ற தமிழ்ப் பற்று மிக்கவர்களாகவும் இருக்கின்றனர்.

பழம் பெரும் நூல்களை ஆராய்தல், காப்பியங்களை பகுத்தறிதல், தமிழ் இலக்கண இலக்கியங்களை மிகைப்படுத்துதல்,
நாடகங்கள், கட்டுரைகள், கவிதைகள், சிற்றுரைகள், என நம் தமிழின் தொன்மைதனை  ஆராய்ந்து வருவதில் வல்லுனர்களாக முன்னேறி வருகின்றனர்

மேலும் கடந்த மாதம் ஔவையின் நீதிநூல்களில் ஒன்றான ஆத்திசூடியின் 109 வரிகளை 109 மாணவர்கள் இணைந்து எடுத்துரைத்து மாபெரும் நிகழ்வினை தமிழ் மொழிக்கு கொடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று திருக்குறளின் 1330 குரள்களையும் 133 மாணவச் செல்வங்கள் ஒன்றிணைந்து ஒருவர் ஒரு அதிகாரம் என ஒவ்வொருவரும் காண்போரும் கேட்போரும் வியந்து நிற்கும் வண்ணம் தன் கம்பீரக் குரலில் மேடை ஏற்றினர்.

இந்த பிரம்மாண்ட நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக நாடகத் துறையின் ஜாம்பவானும், ஆசிரியருமாகிய கலைச்செம்மல். உயர் திரு.  ஆரோக்கிய ப்ரதீப் அவர்கள் மாணவர்களின் தமிழ் திறனை வியந்து பாராட்டினார்

பள்ளியின் தாளாளர் தந்தை அவர்கள் மாணவர்களின் தமிழ் உச்சரிப்பு, தமிழ் மொழிக்காக அவர்கள் எடுத்து செல்லும் நிகழ்வுகள் என அனைத்தையும் பெருமிதத்துடன் பாராட்டினார்.

விரைவில் இந்த தமிழ் நிகழ்வுகள் முப்பெரும் சாதனைகளாக உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாகும்.

மாணவர்களின் தமிழ் திறமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ்

முதன்மை செய்தியாளர் தஞ்சாவூர்.

By TN NEWS