Thu. Nov 20th, 2025



அக்டோபர் 17 – வேலூர் மாவட்டம், குடியாத்தம்

குடியாத்தம் ஒன்றியம், மேல்முட்டுகூர் ஊராட்சி கல்மடுகு கிராமத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2023–2024 ஆம் ஆண்டில் சுமார் ரூ.14,31,000 மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

ஆனால், புதிய கட்டிடம் முழுமையாக முடிவடைந்திருந்தும் இதுவரை திறப்பு விழா நடத்தப்படாததால், அந்த மையம் பூட்டிய நிலையிலேயே உள்ளது. இதனால் அப்பகுதி சிறுவர், சிறுமியர்கள் தற்போது பழைய தற்காலிக இடங்களில் தினமும் சிரமத்துடன் கல்வி மற்றும் ஊட்டச்சத்து சேவைகளை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய கட்டடத்துடன் சமையல் கூடமும் முழுமையாக தயார் நிலையில் இருப்பதாக தெரிகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேல்முட்டுகூர் ஊராட்சியில் அமைந்துள்ள புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

 

By TN NEWS