வேலூர் மாவட்டம் – குடியாத்தம்
ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் கோரிக்கை அட்டை வழங்கினர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று, ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் தங்களது பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,
தமிழ்நாடு அரசு 2021ஆம் ஆண்டு தேர்தல் கால வாக்குறுதிகளின் அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கான பல்வேறு கோரிக்கைகளையும் அரசிடம் சமர்ப்பித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயகாந்தன் தலைமையேற்றார்.
தமிழ்நாடு முதல் நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் ஆர். ஜெயக்குமார்,
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் திருஞானசம்பந்தம்,
வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாவட்ட தலைவர் ரமேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்ட செயலாளர் ஆசிப்புதின்,
மாவட்ட செயலாளர் டி.ஆர். ரவி,
மாநில முன்னாள் சட்ட செயலாளர் ஜெ. காந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இறுதியில் டீ. மலர்விழி நன்றி கூறினார்.
செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுகா.