Thu. Nov 20th, 2025

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், வீராணம் நகரத்தில் சமீபகாலமாக தெரு நாய்களால் ஏற்படும் தொல்லை மற்றும் நோய் தொற்றுப் பரவலைத் தடுக்க வேண்டும். SDPI  கட்சி வலியுறுத்தல்…

வீராணத்தில் தெரு நாய்களால் ஏற்படும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, பொதுமக்களிடையே கடும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. நாய்க்கடி சம்பவங்கள், ரேபிஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள், சாலை விபத்துகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்த கவலைகள் மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன.

16/10/25 நேற்று  நான்கு நபர்கள் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்  இப்பிரச்சினை குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்களை அதிகம் பாதிக்கிறது.

ரேபிஸ் 100 சதவீதம் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய கொடிய நோயாகும்.  தெரு நாய்கள் சாலைகளில் திடீரென புகுந்து வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், தனியாக நடமாடும் முதியவர்கள், பெண்கள் மற்றும் இரவு நேரங்களில் வேலை முடிந்து திரும்பும் தொழிலாளர்கள் நாய்களால் தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன, இது மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயத்தை உருவாக்கியுள்ளது.

மாவட்ட நிர்வாகமே உள்ளாட்சித் துறையே  ஆபத்தான தெரு நாய்களை  கண்டு  நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்…

இவன்:-
SK காதர் மைதீன் (எ)சேட் நகரத் தலைவர்,SDPI கட்சி சமூக ஊடக அணி வீராணம், தென்காசி மாவட்டம்.

செய்திகள்: ஜெ  .அமல்ராஜ்

மாவட்ட தலைமை நிருபர்.   தென்காசி மாவட்டம்.

By TN NEWS